புத்ராஜெயா, பிப்.23-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம், நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. அவர்கள் கையூட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்நால்வரையும் தடுத்து வைப்பதற்கான உத்தரவை கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் மாஜிஸ்ரேட் இர்ஸா ஸூலைக்கா வெளியிட்டதாக SPRMமுக்கு நெருக்கமான வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மூவர் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டார்.
SPRM தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியைத் தொடர்பு கொண்ட போது அந்நால்வரும் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.