மலாக்கா, பிப்.24-
மலாக்கா, தங்கா பத்துவில் உள்ள ஒரு தொழில்பேட்டையில் தொழிற்சாலை ஒன்றின் மின்சார இணை நிலைய Transformer அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அந்நியத் தொழிலாளர்கள் கருகி மாண்டனர். மேலும் இருவர் கடும் தீக் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இரு அந்நிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு அந்நியத் தொழிலாளர்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.