கோலாலம்பூர், பிப்.24-
கோலாலம்பூர் மாநகரில் மிக பரபரப்பான வர்த்தகத் தலமான Petaling Street-டிற்குச் செல்லும் பிரதான அடையாள விளம்பரப் பலகையில் சீன எழுத்துக்களை அகற்றும் திட்டத்தை தாங்கள் கொண்டு இருப்பதாக கூறப்படுவதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மறுத்துள்ளது.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு எதிராக மிக அபத்தமான குற்றச்சாட்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
விளம்பரப் பலகையில் சில வழிகாட்டல்களை மாநகர் மன்றம் வெளியிட்டுள்ளது. ஆனால், அது சீன எழுத்துக்களை அகற்றுவதற்கான உத்தரவுகளை கொண்டிருக்கவில்லை என்று இன்று விளக்கம் அளித்துள்ளது.