ஹனோய், பிப்.24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை செவ்வாய்க்கிழமை வியட்நாமிற்கு அலுவல் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
தலைநகர் ஹனோயில் புதன் கிழமை தொடங்கவிருக்கும் ஆசியான் எதிர்காலம் மீதான ஆய்வரங்கில் ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் பிரதான உரை நிகழ்ந்தவிருக்கிறார்.
ஆசியார் பிராந்தியம் எதிர்கொள்ளவிருக்கும் முக்கிய சவால்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையில் வலுப்படுத்தப்பட வேண்டிய உறவுகள் ஆகியவை குறித்து பிரதமர் பிரதான உரை நிகழ்த்துவார் என்று விட்நாமிற்கான மலேசியத் தூதர் டத்தோ யாங் தாய் தெரிவித்துள்ளார்.