கோலாலம்பூர், பிப்.24-
சுங்கை பூலோ சிறைச்சாலையில் 32 சொஸ்மா கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவலை மறுத்து இருக்கும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பொய்யுரைப்பதாக கைதிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சொஸ்மா கைதி ஒருவரின் துணைவியார் 37 வயது பிரேம்ஸ்ரீ கூறுகையில், தமது கணவர் தாக்கப்பட்டதால் அவரின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை தாம் நேரடியாக பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கணவரின் உடலில் பலத்த காயங்கள் இருக்கும் பட்சத்தில் அவர் சித்ரவதைக்கு ஆளாகவில்லை என்று அமைச்சர் சைபுடின் எவ்வாறு பொய்யுரைக்க முடியும் என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரேம்ஸ்ரீ மேற்கண்டவாறு கூறினார்.