பாலிங், பிப்.24-
நிரந்தர இடமின்றி, தற்போது கோலக்கெட்டில் பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளிக்கு தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ள கெடா, பாலிங் மாவட்டத்தில் உள்ள கத்தும்பா தமிழ்ப்பள்ளி மூடப்படாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
சைம் டார்பிக்கு சொந்தமான கத்தும்பா தோட்டம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளி மற்றொரு பள்ளிக்கு தற்காலிமாக இடம் மாற்றப்பட்டது.
மடானி அரசாங்கத்தின் கீழ் கத்தும்பா தமிழ்ப்பள்ளி உட்பட எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்று இன்று நாடாளுமன்றத்தில் ஃபட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.
நிரந்தர இடமின்றி அலைகழிக்கப்படும் கத்தும்பா தமிழ்ப்பள்ளி தொடர்பாக ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஃபட்லீனா சீடேக் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளையில் மடானி அரசாங்கத்தின் கீழ் இந்நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் பாதுகாக்கப்படும் என்று இந்திய சமுதாயத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கல்வி அமைச்சுக்கு உதவுமாறு ராயரை ஃபட்லீனா சீடேக் கேட்டுக்கொண்டார்.