பொது பல்லைக்கழக உதவி பொறியியலாளர் கைது

ஜோகூர் பாரு, பிப்.25-

5 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக நம்பப்படும் பொது பல்கலைக்கழகம் ஒன்றின் உதவி பொறியியலாளர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

ஒரு குத்தகைத் திட்டத்தின் தரத்தை உயர்த்துவதற்கு கட்டுமான கழிவுப்பொருட்களை அகற்றுவதில் தமது அதிகாரத்தை அந்த உதவி பொறியியலாளர் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் 5 லட்சம் ரிங்கிட் இழப்பை அந்த பொறியிலாளர் ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் ஜோகூர் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அந்த உதவி பொறியியலாளர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS