ICT எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பாடத்திட்டம் அடிப்படையிலான Fundamental of Computer எனும் நூல் வெளியீடு கண்டுள்ளது.
லோகனபிரியா ராஜகோபாலினால் எழுதப்பட்ட Fundamental of Computer, கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர் Asia Pacific தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான STH ICT Consultant நிறுவனத்தின் 3 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
இந்து ICT பாட நூல், STH ICT Consultant நிறுவனம் வெளியிட்டுள்ள மூன்றாவது நூலாகும் என்கிறார் STH ICT Consultant நிறுவனத்தின் தலைவர் திருமதி திலகவதி.
முதலாவது ICT பாடல் நூல், 2D Animation ஆகும். இரண்டாவது நூல் Artificial Intelligence என்பதாகும். தற்போது Fundamental of Computer எனும் பாட நூல் வெளியிடப்பட்டுள்ளதாக திலகவதி கூறுகிறார்.
இந்த மூன்று நூல்களுமே ICT சார்ந்த புத்தகங்களாகும். ICT – யை கற்க விரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி இடைநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருமே இந்த புத்தகத்தைப் பயன்படுத்தலாம்.
Disign Editing மட்டுமின்றி அடிப்படையான நிறைய விஷயங்களை இந்த நூலில் கொடுத்துள்ளோம். Artificial Intelligence- ஸில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு ஒரு குறும்படத்தை மாற்றுவது என்ற ஒரு தலைப்பையும் கொடுத்து இருக்கிறோம் என்ற திருமதி திலகவதி விளக்கினார்.