கோலாலம்பூர், பிப்.25-
மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களைத் தொடர்புபடுத்தி, பொய்யான உள்ளடக்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தற்காகக் குற்றஞ்சாட்டப்படவிருந்த ஆடவர் ஒருவர், நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் அந்த ஆடவரை மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் கைது செய்தது.
தற்போது அரச ம லேசிய போலீஸ் படையின் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவர், விரைவில் சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அந்த ஆடவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த நபரை நேற்று கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.