தங்காக், பிப்.25-
ஜோகூர், தங்காக்கில் ரப்பர் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் எழுவர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. ரப்பர் பதப்படுத்தப்படும் அந்த தொழிற்சாலையில் உள்ள ஐந்து இயந்திரங்களில் ஒன்றில் தொழிலாளர்கள், பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரம் வெடித்தது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் மொத்தம் ஒன்பது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மாண்டனர். கடும் காயங்களுக்கு ஆளான 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் தொழிலாளர் தங்காக் மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
மற்றொருவர், ஆபத்தான நிலையில் மூவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக ரோஸ்லான் முகமட் தாலிப் குறிப்பிட்டார்.