எஸ்பிஆர்எம் விசாரணைக்கே விட்டு விடுகிறேன் – அகமட் ஜாஹிட் கூறுகிறார்

தாவாவ், பிப்.25-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நான்கு மூத்த உதவியாளர்கள் கைது, அவர்களின் ஒருவரின் வீட்டில் 10 கோடி ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கே தாம் விட்டு விடுவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தனது சட்டத்திற்கு உட்பட்டு, எஸ்பிஆர்எம் இந்த விசாரணையை மேற்கொள்ளும் அதே வேளையில் இவ்விவகாரத்தை அந்த ஆணையத்தின் முடிவிற்கே தாம் விட்டு விடுவதாக துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS