ஆணும் பெண்ணும் படுகாயம், மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்

ஜார்ஜ்டவுன், பிப்.25-

ஓர் ஆணும், பெண்ணும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் காரினால் மோதப்பட்டு, இருவரும் மேம்பாலத்தில் சுமார் 8 மீட்டர் உயரத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் பினாங்கு பாலத்தில் Batu Uban-னிலிருந்து பிறைக்கு செல்லும் வழியில் நிகழ்ந்தது.

அந்த இருவரும் எதிர்த் திசையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் லீ ஸ்வீ சாக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS