ஷா ஆலாம், பிப்.25-
இரண்டு தினங்களுக்கு முன்பு ஷா ஆலம் மாநகர் மன்ற பிரதான மண்டபமான டேவான் பெசார் தஞ்சோங்கில் நடைபெற்ற தற்காப்புக் கலைப் போட்டியில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் மேலும் ஒரு நபரை கைது செய்துள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த 61 வயதுடைய நபர், நேற்று இரவு 10 மணியளவில் பூச்சோங்கில் உள்ள ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிடிபட்ட நபருக்கு ஏற்கனவே எட்டு குற்றப் பதிவுகள் உள்ளன. அந்த நபரை மூன்று தினங்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக முகமட் இக்பால் குறிப்பிட்டார்.