கோலாலம்பூர், பிப்.25-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்துள்ள அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் மார்ச் 24 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி நஜீப் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அப்பீல் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி அளித்தது.
அம்முடிவை எதிர்த்து சட்டத்துறை அலுவலம் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , வழக்கு விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.