போலி மருத்துவச் சான்றிதழை வழங்கிய மருத்துவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், பிப்.25-

குழந்தை பிறப்பு தொடர்பில் தேசிய பதிவு இலாகாவிற்கு போலி மருத்துவச் சான்றிதழை வழங்கிய குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் அபராதம் விதித்தது.

83 வயது Arthur Varkey Samuel என்ற அந்த மருத்துவர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இரவு 10 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மாது ஒருவர் குழந்தை பிரசவித்ததது போல் போலியான மருத்துவச் சான்றிதழைத் தயாரித்து கொடுத்து மோசடி புரிந்ததாக அந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மாது ஒருவருக்கு பிறக்காத குழந்தையை அந்த மாதுவிற்கு பிறந்ததைப் போல் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்ததற்காக அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS