இஸ்மாயில் சப்ரியின் மூன்று உதவியாளர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், பிப்.25-

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணம் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் மூன்று மூத்த உதவியாளர்கள் எஸ்பிஆர்எம் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அந்த மூவருக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள தடுப்புக் காவல் ஆணை முடிவுற்றதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார். இஸ்மாயில் சப்ரியின் உதவியாளர்களில் மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்ட வேளையில் எஞ்சிய மூவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் நான்கு உதவியாளர்களில் ஒருவரின் வீட்டில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 10 கோடி ரிங்கிட் ரொக்கம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS