கோலாலம்பூர், பிப்.26-
கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் 7 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது, பயனீட்டாளர் ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொள்ளை லாபம் ஈட்டும் அந்த உணவகத்தின் போக்கில் அதிருப்தி கொண்ட அந்த பயனீட்டாளர் தனது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் சமூக வலைத்தள பக்கத்தில் இதர வலைவாசிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
தாம் வாங்கிய ஒரு கிளாஸ் தண்ணீர், 7 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டதை நிரூபிக்க அதன் ரசீதையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
எனினும் உணவை ஆர்டர் கொடுக்கும் போது, அந்த உணவகத்தில் தண்ணீருக்கு கட்டணம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் , ஆனால் அந்த கட்டணம் 7 ரிங்கிட் வரை எகிறும் என்று தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்த பயனீட்டாளர் தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
இருப்பினும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் 7 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என்பதை தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.