ஜார்ஜ்டவுன், பிப்.26-
பினாங்கில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
அந்த கும்பலைச் சேர்ந்த ஏழு ஆடவர்கள் நேற்று கைது செய்யப்பட்டது மூலம் சங்கிலித் தொடரைப் போன்று நடந்து வந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
தீமோர் லாவுட் மற்றும் பாயான் லெப்பாஸ் மாவட்ட போலீசார் கூட்டாக இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.