தொழிற்சாலையின் செயலாக்கத்தை நிறுத்த உத்தரவு

தங்காக், பிப்.26-

ஜோகூர், தங்காக்கில் உள்ள ரப்பர் பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் இயந்திரம் ஒன்று வெடித்து, இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ரப்பர் தொழிற்சாலையின் செயலாக்கத்தை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருவர் உயிரிழந்ததுடன் மேலும் எழுவர் கடும் காயங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் புலன் விசாரணை முடியும் வரையில் தொழிற்சாலை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில சுகாதார மற்றும் வேலையிட பாதுகாப்பு இலாகா உத்தரவிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS