பேரா மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிறுத்தப்படலாம்

ஈப்போ, பிப்.26-

நடைபெறவிருக்கும் தாப்பா, ஆயர் கூனிங் சட்டமன்றத் இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக பேரா மாநில அம்னோ இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ஃபாமி அஹ்மாட் ஜாக்கிசி நிறுத்தப்படலாம் என்று ஆருடங்கள் பலமாக கூறப்பட்டு வருகின்றன.

தாப்பா அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஃபாமி அஹ்மாட் இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பேரா மாநில பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ உச்சமன்றத்தின் ஆசியைப் பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

தாப்பாவில் பிறந்தவரான 42 வயது ஃபாமி அஹ்மாட், வளர்ந்தது ஆயர் கூனிங் ஆகும். கடந்த வாரம் சனிக்கிழமை ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS