பெட்டாலிங் ஜெயா, பிப்.26-
கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைக்கப்பட்டு, கம்போடியாவில் உள்ள மோசடிக் கும்பல்களின் பிடியில் சிக்கிக்கொண்ட 60 மலேசியர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த 60 மலேசியர்களும் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி கம்போடியா – தாய்லாந்து எல்லைக்கு அருகில் கம்போடியாவின் பொய்பேட் என்ற இடத்தில் அந்நாட்டு அமலாக்கத் தரப்பினரால் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல் நடவடிக்கைக்காக அந்த 60 மலேசியர்களும் புராதான நகரான சியேம் ரியாப்பில் உள்ள குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.