கோலாலம்பூர், பிப்.26-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், புருணைக்கு சிறப்பு வருகை மேற்கொண்டு, தலைநகர் பண்டார் ஶ்ரீ பெகாவானைச் சென்றடைந்தார்.
மலேசிய மாமன்னரின் இந்த வருகையையொட்டி, புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்சானால் போல்கியா மகத்தான வரவேற்பை நல்கியதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் பயணம் செய்த சிறப்பு விமானம், இன்று பிற்பகல் 2.25 மணியளவில் பண்டார் ஶ்ரீ பெகாவானில் தரையிறங்கியதாக முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.