14 கத்திக் குத்துக் காயங்களுடன் மாது கொலை

மலாக்கா தெங்கா, பிப்.26-

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாக்கா, மாலிக் மலாக்கா, செக்‌ஷன் 1, தாமான் ஶ்ரீ மங்காவில் உள்ள ஒரு வீட்டில் மாது ஒருவர் 14 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டோப்பர் பதிட் தெரிவித்தார்.

அந்த மாதுவின் உடல் மலாக்கா மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, தடயவியல் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த மாதுவின் உடலில் 14 வெட்டுக்குத்துக் காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கிரிஸ்டோப்பார் பதிட் குறிப்பிட்டார்.

மார்பிலும் முகத்திலும் இடது கையிலும் ஆழமான காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த கொலை சம்பவம், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கிரிஸ்டோப்பார் பதிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS