கோலாலம்பூர், பிப்.26-
ஊடகங்கள் மீதான 2004 ஆம் ஆண்டுக்கான் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மலேசியாவில் உள்ள ஊடகங்களின் சுதந்திரத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் வர்ணித்துள்ளார்.
இந்த சட்ட மசோதா, கடந்த 1973 ஆம் ஆண்டில் அதாவது 52 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரை தற்போது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இது ஊடகத்துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று இன்று நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபாமி தெரிவித்தார்.
இதன் செயல்பாட்டுத்திறன், சற்று தொலைவில் உள்ளது. ஆனால், இது ஒரு தொடக்கம்தான். இருப்பினும் இது மலேசிய ஊடகத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று ஃபாமி புகழாரம் சூட்டினார்.