கோலாலம்பூர், பிப்.26-
மலேசியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் இரண்டரை லட்சம் புற்று நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அதேவேளையில் புற்றுநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐந்து வகையான புற்றுநோய், ஆட்கொல்லியாக உருமாற்றம் கண்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
மார்பகம், கல்லீரல், இருதயம், பெருங்குடல், கட்டி முதலிய புற்று நோயினால் அதிகமானோர் இறப்பதாக டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்திய ஆண்டில் 13 விழுக்காடாக இருந்தது என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.