கோத்தா திங்கி, பிப்.27-
தன்வசம் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது. 65 வயது ஓமார் புசாரி என்ற அந்த முதியவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கு தலா மூவாயிரம் ரிங்கிட் அபராதம் என மொத்தம் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிபதி ஹய்டா ஃபாரிட்சால் அபு ஹாசான் விதித்தார்.
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கோத்தா திங்கி, லாடாங் பாசீர் பஞ்சாங்கில் எவ்வித பெர்மிட் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியையும், 108 தோட்டாக்களையும் அந்த முதியவர் தன் வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.