கோலாலம்பூர், பிப்.27-
சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ தியோங் கிங் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பழந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
36 வயது லிம் சாய் செங் என்ற அந்த தொழிலாளி, தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிபின் அபராதத் தொகையை விதித்தார்.
அந்த பழந்தோட்ட வியாபாரி, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கோலாலம்பூர் செந்தூல், ஜாலான் பார்லிமெனில் உள்ள நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தொலைபேசி வாயிலாக அமைச்சர் தியோங் கிங் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.