குவாந்தான், பிப்.27-
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி குவாந்தான், ஜாலான் பாடாங் குவாந்தான்- சுங்கை குவாந்தான் படகுத்துறைக்குச் செல்லும் சாலையின் ஆற்றோரத்தில் மிகக் கொடூரமான கொலை செய்யப்பட்டுக் கிடந்த உணவு விநியோகப் பெண் கொலை தொடர்பில் வீடு, வாசல் இல்லாத நபர் ஒருவர், குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
53 வயது ஸாய்ஸூல் காமார் அப்துல் கனி என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா துவான் கமாருஸாமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் 37 வயதுடைய நோர்ஷாமீரா ஸைனால் என்ற உணவு விநியோகப் பெண்ணைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை அல்லது கூடிய படசம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் அந்த நபர், குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இக்கொலை வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.