மாசாய், பிப்.27-
ஜோகூர், மாசாய், ஜாலான் மாசாய் லாமா, Lot 80707 இல் வீற்றிருக்கும் சிவகோட்டை ஸ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமூண்டீஸ்வரர் அம்மன் கோவிலில், வருடாந்திர மாசி மாதத் திருவிழா வரும் மார்ச் மாதம் முதல் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
நாளை பிப்ரவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மணி 6.00 க்கு ஆலயத்தில் அம்பாளுக்கு முதல் கால யாகங்கள் நடைபெற்று, இரவு 9.00 மணிக்கு அம்பாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆற்றாங்கரைக்கு சென்று சக்தி கரகம் பாலித்து அருளாடி வருவார்.
மார்ச் முதல் தேதி காலையில் இரண்டாம் கால யாகங்கள் முடித்து இரவு 6 மணியளவில் பால்குடம், சக்தி கிரகம், மற்றும் நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள், பக்த பெருமக்களுடன் புடை சூழவந்து, மலேசியாவில் ராஜ கம்பீரத்துடன் கட்டப்பட்ட 10 அடி உயரம் கொண்ட வாராகி அம்பாளுக்கு அபிஷேகம் செய்வர்.
இவ்விழாவில் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு, வாராகி அம்பாளின் அருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.