சுங்கை பட்டாணி, பிப்.27-
கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன், மயங்கி விழுந்து மரணமுற்றான்.
இன்று காலையில் அப்பள்ளியில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் அந்த மாணவன் 6 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் மயங்கி கீழே விழுந்தாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாணவனுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அந்த மாணவன் கொண்டு செல்லப்பட்டான்.
எனினும் மாணவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர் என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.