பெண்கள் முன்கூட்டியே வீட்டிற்குச் செல்வது பரிசீலிக்கப்படுகிறது

ஷா ஆலாம், பிப்.27-

புனித நோன்பு மாதம் தொடங்கவிருக்கும் வேளையில் நோன்பு மாதத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க ஊழியர்கள், வேலை நேரம் முடிவுறுதற்கு முன்னதாகவே வீட்டிற்கு புறப்படுவது குறித்து மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இது குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விரைவில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் பெண் ஊழியர்களுக்கு வேலை நேர தளர்வு வழங்குவது குறித்து, இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS