சிரம்பான், பிப்.27-
சிவபெருமானை போற்றும் சிவராத்திரி விழா, சிறப்பு வழிபாடுகள் சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலில், நேற்று இரவு தொடங்கி, இன்று அதிகாலை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 7 ஆயிரம் பக்த அடிகளார்கள் கலந்து கொண்டு, சிவபெருமானின் அருளாசியைப் பெற்றனர்.
திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் உதவிக் குருக்கள் முன்னிலையில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடு, நேற்றிரவு இரவு 7.31 மணிக்கு தொடங்கியது.
சிவபெருமானை வேண்டி நடத்தப்பட்ட நான்கு கால சிறப்பு பூஜைகள், அபிஷேக தீபாரதனைகள் உட்பட சிறப்பு வழிபாட்டில் இன்று அதிகாலை வரை திளரான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் சிவபுராணத்தை பாரயணம் செய்து, சிவராத்திரி விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
முன்னதாக, நடைபெற்ற சிவபெருமானின் அடையாளப் பிரதிப்பலிப்பான பஞ்சலோக சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பெரும் திரளாக பாலபிஷேகம் செய்து, சுவாமியை வணங்கினர்.
அதிகாலை 4.00 மணிக்கு, நான்காம் கால பூஜைக்கு பின்னர் தன்னை துதித்து தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அகிலத்தில் அ ருளாட்சி புரியும் நாயகியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் / பல்லக்கில் அருள்காட்சி தந்த வண்ணம், பக்தர்கள் புடை சூழ / ஆலயத்தின் வசந்த மண்டபத்தை நோக்கி ஊள்வீதி ஊர்வலம் வந்தது, சிவராத்திரி நிறைவு விழாவின் உச்சமாக அமைந்தது.
Video A- Ulvithi valam Duration Start 00.00 – End 00. 31
இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழ்நாடு, கோயம்புத்தூர், அனுவாவி அகஸ்தியர் ஆலயத்தை சேர்ந்த தவத்திரு குமரசாமி சித்தர் அனைத்து பூஜைகளிலும் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அதேவேளையில் இரவு முதல் விடியற்காலை வரை கண்விழித்து 4 கால பூஜைகளிலும், அபிஷேக ஆதாரனைகளிலும் பங்கு கொண்டு, சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் துணை நின்ற பக்த பெருமக்களுக்கு ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான நிர்வாகத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.