பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவராக சோவ் கோன் யோவ் தொடர்ந்து நீட்டிப்பு

ஜார்ஜ்டவுன், பிப்.27-

பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ், மாநில டிஏபி தலைவராக இல்லை என்ற போதிலும் பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவராக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளையில் பினாங்கு மாநில டிஏபி தலைவரான மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், மாநில பக்காத்தான் ஹராப்பானின் மூன்று துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானில் பிகேஆர் உதவித் தலைவர் சார்பில் நூருல் இஸா மற்றும் அமானா கட்சியின் பொதுச் செயலாளர் Faiz Fadzil ஆகிய இருவரும் இதர இரண்டு துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு மாநில முதலமைச்சராக தாம் பொறுப்பு வகிப்பதால் அந்த கூட்டணிக்கு தொடர்ந்து தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS