பெட்டாலிங் ஜெயா, பிப்.28-
பிறவியிலேயே இருதயம் முழு வளர்ச்சியடையாத நிலையில், குறைப்பாட்டு இருதயத்துடன் பிறந்த எட்டு வயது சிறுமியின் தந்தை, அமெரிக்காவில் தனது மகளின் அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதியைt திரட்டுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் பயிலும் எட்டு வயது எஸ். ஹர்ஷீதா சாய், பிறந்ததிலிருந்தே இருதய நோயுடன் போராடி வருகிறார். அந்த மாணவிக்கு இருதய குறைப்பாடு இருப்பது, அவர், 30 நாள் குழந்தையாக இருக்கும் போது, ஜோகூர்பாரு மருத்துவமனையில் கண்டறியப்பட்டது.
அம்மருத்துவமனை ஆலோசனையின் பேரில் கோலாலம்பூர், இருதய சிகிச்சை கழகமான IJN- க்கு கொண்டு வரப்பட்டு, இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விட்டது.
எனினும் மிக அபூர்வமாக, சிக்கலான இத்தகைய இருதய குறைப்பாட்டிற்கு அமெரிக்கா, Massachusetts-டில் உள்ள முன்னணி சிறார் மருத்துவமனையான Boston மருத்துவமனையில் நிவாரணம் காணலாம் என்று அக்குழந்தையின் தந்தையான 42 வயது ஆர். செல்வகணபதிக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இதற்கான மருத்துவச் செலவு, மூன்று லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலராகும். மலேசிய ரிங்கிட்டில் 15 லட்சம் வெள்ளியாகும் என்று மருத்துவர்கள் மதிப்பிட்டுள்ளதாக தந்தை செல்வ கணபதி கூறுகிறார்.
ஹர்ஷீதா சாய், மருத்துவ அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இறுதி செலவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று பெர்னமாவிற்கு அளித்த பேட்டியில் செல்வகணபதி தெரிவித்துள்ளார்.
ஒது தந்தை என்ற முறையில் உடல் நிலை மோசமடைந்து வரும் தனது மகள் ஹர்ஷீதா சாயைக் காப்பாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர தமக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் செல்வகணபதி.
ஹர்ஷீதா சாய்யின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படக்கூடிய நிதியைப் பொது மக்கள் மூலம் திரட்ட செல்வகணபதி உறுதி பூண்டுள்ளார். நிதி உதவி அளித்து உதவ விரும்புகின்றவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கில் நன்கொடையை வழங்கலாம்.
CIMB கணக்கு (7001233409),
மேல் விவரங்களுக்கு 012-2522689 ( செல்வகணபதி )