செனாய், பிப்.28-
ஜோகூர், செனாயில் உள்ள ஒரு வீடமைப்புப் பகுதியில் நாய் ஒன்றை அடித்துக் கொடுமைப்படுத்திய வங்காளதேச ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
45 வயது அந்த வங்காளதேசியின் இத்தகைய கோரச் செயல் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த படுபாதகத்தைப் புரிந்த அந்த அந்நிய நாட்டவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி தான் செங் லீ தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்ததுள்ளது. இது தொடர்பாக 33 வயது உள்ளூர் ஆடவர், போலீஸ் புகார் அளித்து இருப்பதாக ஏசிபி தான் குறிப்பிட்டார்.