ஜார்ஜ்டவுன், பிப்.28-
மக்களுக்கு குறிப்பாக பினாங்கு பிறை பகுதியில் வசிப்பவர்களுக்கு உதவுவதில் TNB எனும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் காட்டி வரும் அக்கறைக்கும், அர்ப்பணிப்புக்கும் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், / பிறை சட்டமன்ற உறுப்பினருமான / டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தனது பாராாட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி மகிழ்ச்சியுடன் “ மாணவர்களுக்கான பள்ளிக்குத் திரும்புதல்” எனும் நிகழ்வு, தனது சட்டமன்றத் தொகுதியான பிறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிறை சட்டமன்றத் தொகுதி சேவை மையத்திற்கும், TNB – க்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் பலனாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது. பிறை, சாய் லெங் பார்க் பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ சுந்தராஜுவும் கலந்து கொண்டார்.
முழு நம்பிக்கையுடன் புதிய கல்வி ஆண்டை தொடரவிருக்கும் வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி உபகரணங்களை வாங்குவதற்கு 100 மாணவர்களுக்கு மொத்தம் 15 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 100 வவுச்சர்களை TNB வழங்கியது.
ஏற்கனவே டத்தோஸ்ரீ சுந்தராஜு தனது பிறை சடட்மன்றத் தொகுதியைச் சேர்ந்த உதவி தேவைப்படக்கூடிய தேர்வு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் தலா 150 ரிங்கிட் மதிப்புள்ள வவுச்சர்களை வழங்கி, ஏழ்மை குடும்பங்களின் பள்ளி செலவின சுமையைக் குறைத்து இருந்தார்.
இந்நிலையில் TNB மேலும் 100 வசுச்சர்களை வழங்கி, உதவ முன் வந்த நிலையில், அவர்களின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜூவும் , 7,500 ரிங்கிடசெலவில் மேலும் 50 மாணவர்கள் பயன் அடையும் வகையில் 50 வசுச்சர்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் TNB-யும், டத்தோஸ்ரீ சுந்தராஜுவும் இணைந்து 150 மாணவர்களுக்கு மொத்தம் 22,500 ரிங்கிட் மதிப்பில் 150 ரிங்கிட் பெறுமானமுள்ள வவுச்சர்களை வழங்கினர்.
இவ்வேளையல் TNB- யின் பினாங்கு மாநில தலைமை நிர்வாகி Norhizami Abu Hassan- னுக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு தனது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் TNB-யின் இந்த பங்களிப்பானது, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை நிரூபிக்கிறது என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு புகழாரம் சூட்டினார்.