சிறப்பான அடைவு நிலை, அமைச்சர் ங்கா கோர் மிங்கிற்கு பேரா சுல்தான் பாராட்டு வாழ்த்து

கோலாலம்பூர், பிப்.28-

மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா பேரா சங்காட் அரண்மனையில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, வீடமைப்பு, ஊராட்சித்துறையின் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை பேரா சுல்தானிடம், அமைச்சர் ங்கா கோர் மிங் வழங்கினார்.

அந்த அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் செயல் நடவடிக்கைக்கான அடைவு நிலையின் வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டியது.

குறிப்பாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, முதல் முறையாக தேசிய மேம்பாட்டு விருதை வென்றது உட்பட அந்த அமைச்சின் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியது.

அமைச்சின் அபார செயல் திறனுக்காக அதன் அமைச்சர் என்ற முறையில் ங்கா கோர் மிங்கிற்கும், அமைச்சின் அதனைத்துப் பணியாளர்களுக்கும் மேன்மை தங்கிய சுல்தான், சுல்தான் நஸ்ரின் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS