ஈப்போ, பிப்.28-
தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி, காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆரிடம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர், டத்தோ முகமட் ஸாகிர் அப்துல் காலிட், அதற்கான கடிதத்தை பேரா மாநில எஸ்பிஆர் இயக்குனரி முகமட் நஸ்ரி இஸ்மாயிலிடம் ஒப்படைத்தார்.
கடிதம் ஒப்படைப்பு சடங்கு, இன்று காலை 10.15 மணியளவில் ஈப்போ, பகுனான் பேரா டாருல் ரெட்சுவான் கட்டிடத்தில் நடைபெற்றது.
பாரிசான் நேஷனலை சேர்ந்த ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடின் கடந்த சனிக்கிழமை காலமானார். அவரின் இறப்பைத் தொடர்ந்து இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அத்தொகுதி காலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக எஸ்பிஆரிடம் தெரிவிக்கப்பட்டது.