ஷா ஆலாம், பிப்.28-
சிலாங்கூர் மாநில மக்களுக்கு பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் முயற்சியின் ஒரு பகுதியாக Jalajah JobCare Selangor வேலை வாய்ப்புச் சந்தையை, மாநில அரசு இவ்வாண்டும் தொடரவிருக்கிறது என்று மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு அறிவித்துள்ளார்.
Jalajah JobCare Selangor திட்டத்தின் கீழ் கடந்தாண்டு மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 35,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையின் வாயிலாக சேவைத்துறை, தயாரிப்புப்புத்துறை, சந்தை வாய்ப்புகள், சுகாதாரம், சுற்றுலா, உபசரணை, போக்குவரத்து, உணவு மற்றும் குடிநீர் பானத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு இருப்பதை பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.
சிலாங்கூரில் ஒன்பது மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு Jalajah JobCare Selangor வேலை வாய்ப்பு சந்தை வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
Jalajah JobCare Selangor வேலை வாய்ப்ப்புச் சந்தை நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:
ஏப்ரல் 19 ஆம் தேதி – கோம்பாக் டேவான் ஸ்ரீ சியாந்தான் மண்டபம்
மே 24 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற சமூக மண்டபம்
*ஜூன் 21 ஆம் தேதி கோல லங்காட் டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபம்
ஜூலை 5 ஆம் தேதி – உலு சிலாங்கூர் டேவான் மெர்டேக்கா, கோல குபு பாரு
ஜூலை 19 ஆம் தேதி – உலு லங்காட் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபம்
ஜூலை 27 ஆம் தேதி – கிள்ளான் டேவான் ஹம்சா மண்டபம்
ஆகஸ்ட் 9 ஆம் தேதி – கோல சிலாங்கூர் புஞ்சா ஆலம் எம்.பி.கே.எஸ். மண்டபம்
அக்டோபர் 11 ஆம் தேதி – சபாக் பெர்ணம் டேவான் துன் ரசாக் மண்டபம்
ஆகக்கடைசியாக நவம்பர் 15 ஆம் தேதி, சிப்பாங் டேவான் கம்யூனிட்டி பி.பி.எஸ்.டி. மண்டபம் என்று பாப்பா ராய்டு பட்டியலிட்டார்.