குவாந்தான், பிப்.28-
சைக்கிளில் சாலையைக் கடக்க முற்பட்ட மூதாட்டி ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் குவாந்தான், ஜாலான் கம்போங் ஜாவாவில் நிகழ்ந்தது.
குவாந்தான், ஜாலான் புகிட் செதொங்கோலைச் சேர்ந்த 85 வயது சான் ஆ மூய் என்பரே இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டது.
70 வயது மூதாட்டி ஒருவர் செலுத்திய Perodua Axia காரில் மோதப்பட்ட அந்த மூதாட்டி, கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் சாஹாரி வான் பூசு தெரிவித்தார்.