யுத்த கால வெடிகுண்டு கண்டு பிடிப்பு

பாபார், பிப்.28-

இரண்டாவது உலகப் போரின் போது கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் யுத்த கால வெடிகுண்டு ஒன்று, இன்று கண்டு பிடிக்கப்பட்டது.

சபா, பாபார், கினாருட் என்ற இடத்தில் தொழிற்சாலையின் அருகில் பூமி வேலைகள் நடைபெற்று வரும் கட்டுமானத் தளத்தில் அந்த வெடிகுண்டு மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்டது.

அதனைப் பார்த்த கட்டுமானத் தொழிலாளி, போலீசுக்கு தகவல் கொடுத்ததாக பாபார் மாவட்ட போலீஸ் தலைவர் கமாருடின் அம்போ சக்கா தெரிவித்தார்.

வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த வெடிகுண்டு இன்னமும் செயல்பாட்டு தன்மையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை இதே போன்ற ஒரு வெடிகுண்டு அப்பகுதியில் மீட்கப்பட்டதையும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS