பத்து பஹாட், பிப்.28-
ஜோகூர், ஆயர் ஈத்தாம், ஜாலான் யொங் பேங் செல்லும் சாலையின் மூன்றாவது மைலில், இடுகாடு ஒன்றின் அருகில் தீயில் அழிந்த Wheel Drive வாகனத்திற்குள் மனித உடல் ஒன்று கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த இடுகாட்டை பராமரித்து வரும் 45 வயது உள்ளூர் வாசி ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில், இது திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சவப்பரிசோதனைக்கான அந்த கருகிய உடல் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.