பெட்டாலிங் ஜெயா, பிப்.28-
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியுடன் தனது விமானச் சேவையை நிறுத்திக் கொண்ட உள்ளூர் விமான நிறுவனமான மைஏர்லைன்ஸ் தோற்றுநர் கோ வான் ஹுவாவிற்கு எதிராக 206 முதலீட்டாளர்கள் புதிய வழக்கு மனு ஒன்றை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 60 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட தங்கள் முதலீட்டுப் பணத்தை மைஏர்லைன்ஸ் தோற்றுநர் கோ, மோசடி செய்து விட்டதாக கூறி, அதன் முதலீட்டாளர்கள் இந்த சிவில் வழக்கை தொடுத்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் சார்பில் வழக்கறிஞர் நிறுவனமான ஸாரிட் நிசாமூடின் மூலமாக இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தில் கடின உழைப்பால் சம்பாதித்த அனைத்துப் பணத்தையும் முதலீட்டாளர்கள் இழந்து விட்ட நிலையில் அவர்கள் தற்போது பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்று வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.