கோலாலம்பூர், பிப்.28-
பேரா, தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் தேதியை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையமான எஸ்பிஆர், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் வாக்களிப்பிற்கான தேதிகள் மார்ச் 7 ஆம் தேதி நிர்ணயிக்கப்படும் என்று எஸ்பிஆர் தலைமைச் செயலாளர் இக்மால்ரூடின் ஈஷாக் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி பாரிசான் நேஷனலை சேர்ந்த ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாரூடின் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தாப்பா அம்னோ டிவிஷன் தலைவரான 59 வயது இஷ்சாம் ஷாரூடின், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டியில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.