பிரம்படித் தண்டனை என்னைக் கொன்று விடும்

கோலாலம்பூர், பிப்.28-

கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து 30 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்கக்கப்பட்டுள்ள 36 வயது J. சிவச்சந்திரன் என்பவர், தனக்கு பிரம்படித் தண்டனை வேண்டாம் என்று கோரி, புதிய விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு 12 பிரம்படித் தண்டனை கொடுக்கப்பட்டால் அத்தண்டனை, தன்னை கொன்று விடும் என்றும் அந்த தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சிவசந்திரன் தனது சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிவசந்திரன் மனு மீதான விண்ணப்பம், அடுத்த வாரம் திங்கட்கிழமை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் மூவர் கொண்ட நீதிபதிகளால் விசாரணை செய்யப்படவிருக்கிறது.

பிரம்படித் தண்டனை தனக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், தம்முடைய இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கெடா, போகோக் சேனா சிறைச்சாலையில் சைடி என்ற கைதிக்கு விதிக்கப்பட்ட பிரம்படித் தண்டனையினால் அந்த கைதிக்கு குடல் பகுதியில் ஏற்பட்ட வலியினால் இறந்து விட்ட சம்பவத்தை சிவசந்திரன் ஆதாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS