ஷா ஆலாம், மார்ச்.01-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது சந்தாதார்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான லாப ஈவாக 6.3 விழுக்காட்டை இன்று அறிவித்துள்ளது. இதே போன்று ஷரியா கணக்கு வைத்திருக்கும் சந்தாதார்களுக்கும் 6.3 விழுக்காட்டுத் தொகையை லாப ஈவாக அறிவித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இபிஎப் . சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட லாப ஈவு விழுக்காட்டில், மிக உயரிய விழுக்காடாக இது கருதப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் இபிஎப் . சந்தாதார்களுக்கு 5.5 விழுக்காடு லாப ஈவை அந்த வாரியம் அறிவித்துள்ளது. அதே வேளையில் ஷரியா கணக்கை வைத்திருப்பவர்களுக்கு 5.35 விழுக்காட்டு லாப ஈவை அறிவித்தது.
உலகளாவிய, உள்நாட்டு பொருளாதார நிலைகள் சாதகமாக இருக்கின்ற நிலையில் இபிஎப். வாரியம் தனது சந்தாரர்களுக்கு கூடுதல் லாப ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
இபிஎப்.பின் அதன் பன்முக முதலீட்டு வியூகம், வலுவான சந்தை முதலீடு, நிலையான வருமானம், அதிகமான வெளிநாட்டு சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் லாப ஈவு விழுக்காட்டை அந்த வாரியம் நிர்ணயித்துள்ளது.