சிப்பாங், மார்ச்.01-
சிலாங்கூர், டிங்கிலில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 12 வயது மாணவியுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது மகளுக்கும், அந்த ஆசிரியருக்கும் இடையிலான உறவு, ஆசிரியர் – மாணவி என்ற நிலைமாறி, சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக அந்த மாணவியின் தந்தை செய்து கொண்ட புகாரின் அடிப்படையில் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்துள்ளார்.
தனது மகள் டிக் டாக், லவ் 8 மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி, அந்த ஆசிரியருடன் ரகசிய தொடர்பை கொண்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அந்த சிறுமியின் தந்தை போலீல் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த ஆசிரியர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனினும் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக ஏசிபி நோர்ஹிஸாம் தெரிவித்தார்.