கூலாய், மார்ச்.01-
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஒரு கொலை தொடர்பில் முக்கிய சாட்சியான உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரா, தஞ்சோங் ரம்புத்தான் ஜாலான் செமோரைச் சேர்ந்த 46 வயது K. குமரன் என்பவர் தற்போது தீவிரமாக தேடப்பட்டு வருவதாக ஜோகூர், கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சியாக குமரன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த நபரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தான் செங் லீ கேட்டுக் கொண்டார்.