நந்தகுமார் நியாயமான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச்.01-

அந்நிய நாட்டவர்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் பாகிஸ்தான் ஏஜெண்டைப் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறி, எஸ்பிஆர்எம்மால் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார், நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று NUJM மற்றும் Geramm ஆகிய ஊடகவிலாளர்கள் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு மலேசிய கினி நிருபர் விசாரிக்கப்பட வேண்டும். லஞ்சம் பெற்றதற்காக நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள நந்தகுமார் தொடர்பான ஆகக் கடைசியான நிலவரங்களைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வரப் போவதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதே வேளையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் இவ்விவகாரம் குறித்து விரிவாக கருத்துரைப்பதைத் தாங்கள் தவிர்க்க விரும்புவதாக அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS