விசாரணை பாரபட்சமின்றி இருக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.01-

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறி, மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், ஊழல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு இன்று வலியுறுத்தியுள்ளது.

முறையான நெறி முறைகளைப் பின்பற்றி உறுதியான, நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்று இருக்க வேண்டும் என்ற தாங்கள் நம்புவதாக C4 எனப்படும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக அதிகாரி புஷ்பன் முருகையா தெரிவித்தார்.

லஞ்ச ஊழலில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாய வேண்டும் என்பதில் C4 அமைப்புக்கு மாற்று கருத்து இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS